தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக வங்கிகளின் வேலை நேரம் 2 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக மாநில வங்கியாளர்கள் குழுமத்தின் பொது மேலாளர் எஸ்.சி.மோகன்தாஸ் உறுப்பினர் வங்கிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் விபரம் வருமாறு:
கொரோனா 2-வது அலையிலிருந்து அனைவரும் பாதுகாத்து கொள்ள வேலை நேரம் குறைக்கப்படுகிறது. வங்கி மண்டல அலுவலகங்கள் நிர்வாக அலுவலகங்கள் மற்றும் வங்கி கிளைகள் அனைத்தும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.
மேலும் வேலை நேரங்களில் போது வாடிக்கையாளர்களுடன் வங்கியை சேர்ந்த அதிகாரிகள் நேரடி தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும். இணை நோயுள்ளவர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஊழியர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் வீட்டில் இருந்தபடியே பணிபுரியலாம். வங்கிகளில் தற்போது செயல்பட்டு வரும் ஆதார் பதிவு மையங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் கூட்டம் நெரிசல் அதிகம் உள்ள வங்கி கிளைகள் தேவைப்படும் பட்சத்தில் போலீஸ் உதவியை நாடலாம்.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள வங்கிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி இயங்கலாம். மேலும் ஏ.டி.எம்., மற்றும் பணம் மறுசுழற்சி இயந்திரங்கள் எப்போதும் போல தடையில்லாமல் செயல்படுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் வங்கிகளின் வணிக பிரதிநிதிகளின் சேவைகள் அனைத்து நேரங்களிலும் கண்டிப்பாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தகுதியுடைய அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வங்கிகள் ஊக்குவிக்க வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ள வழி காட்டு நெறிமுறைகளான முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல் என அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
வங்கியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரடியாக வந்து சேவையைப் பெறுவதற்கு பதிலாக அவர்களுக்கு டிஜிட்டல் முறையில் வங்கி சேவை தளத்தின் மூலமாக அதிகம் பயன்படுத்த வங்கிகள் அறிவுரைகள் வழங்க வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் இன்று முதல் வருகின்ற 30-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அதன்பின்பு சூழ்நிலையைப் பொருத்து இந்த நடைமுறைகள் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு