பல்வேறு காரணங்களால் பள்ளிகளில் இடையில் படிப்பை நிறுத்திய குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழக அரசை, மத்திய அரசு கேட்டுள்ளது.பொருளாதார நிலை, வாழ்வாதாரம் இல்லாமல் ஏழ்மை நிலை, குழந்தை தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் தங்களது படிப்பை இடையில் நிறுத்தும் நிலைநாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ளது.தமிழகத்திலும் பலஇடங்களில் இந்த இடைநிற்றல் உள்ளது.இதையடுத்து, பள்ளி இடைநிற்றல் குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் கிராமஅளவில் குழுக்களை நியமித்து பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை சேகரிக்கவும் மத்தியஅரசு கேட்டுள்ளது.கொரோனா பரவல் தொடங்கியதற்கு பின்னர் அக்காலத்தை அளவீடாக கொண்டு பள்ளிக்குழந்தைகளின் இடைநிற்றல் விவரங்களை சேகரிக்கவேண்டும் என்று மத்தியகல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் எத்தனை பேர் அவர்கள் தற்போது யாருடைய பராமரிப்பில் உள்ளனர் என்பது குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும்.இந்த குழந்தைகளின் தற்போதைய நிலை என்ன என்றும் அவர்களின் எதிர்காலத்திற்கு என்ன செய்ய முடியும் என்பதை அரசு ஆய்வு செய்து கேரள மாநிலத்தைப்போல் அவர்களுக்கு இலவச கல்வி, சிறப்பு நிதி உதவி ஆகியவற்றை செய்து தரவேண்டும் என்றார்.கொரோனா தொற்று காலத்தில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது.குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.இதை அரசுகவனித்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கல்வியாளர் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு