Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

16-11-2020 முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் செயல்பட அனுமதி


16-11-2020 முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் செயல்பட அனுமதி

நவம்பர் 30 வரை மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



இதுதொடர்பாக தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிக்கையில் கூறியதாவது.


கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அதன்படி இந்த அரசு நோய்த் தொற்றில் இருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.


அதன் விளைவாக நோய் பரவல் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.


1. பள்ளிகள் (9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மட்டும்) அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் 16.11.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.


2. பள்ளி/கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட அனைத்து விடுதிகளும் 16.11.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றனர்


பொதுமக்களின் நலன் கருதி அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


Press News 31.10.2020 - Download here....

Post a Comment

0 Comments