Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி சான்றிதழ் இனி ஆயுள்காலம் முழுவதும் செல்லும் என அறிவிப்பு

TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி சான்றிதழ் இனி ஆயுள்காலம் முழுவதும் செல்லும் என அறிவிப்பு

TET தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு ஓர் மகிழ்வான செய்தி :

தமிழகத்தில் 80 ஆயிரம் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று சான்றிதழ் நீட்டிப்பு கோரி போராடி வருகின்ற நிலையில் TET தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் எனும் அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தேசிய ஆசிரியர் குழு NCTE வெளியிட்டுள்ள செய்தியில் ஆசிரியர் தகுதி தேர்வு ஒரு முறை தேர்ச்சி பெற்றால் போதும் ஆயுள் முழுவதும் செல்லும் என தெரிவித்துள்ளது. எனவே இதன் காரணமாக புதிதாக வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆயுள் முழுவதும் செல்லும் வகையில் இனி வழங்கப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே அதற்கான சான்றிதழ் செல்லும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

அதேபோல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோருக்கு ஆயுள் சான்றிதழ் நீட்டிப்பு வழங்குதல் குறித்து சட்ட ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழு தெரிவித்துள்ளது.

NCTE Letter - TET Certificate Valid for Life  Time - Download here...


Post a Comment

0 Comments