Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

தமிழக வருமானவரித்துறையில் வேலை (விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2021)

தமிழக வருமானவரித்துறையில் காலியாக உள்ள 38 வருமானவரி ஆய்வாளர், வரி உதவியாளர் மற்றும் MTS பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


மொத்த காலியிடங்கள்: 38


ADVERTISEMENT

பணி மற்றும் காலி இடங்கள்: Inspector of Income Tax - 12

ஊதியம் : மாதம் ரூ. 9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600


பணி மற்றும் காலி இடங்கள்: Tax Assistant - 16

ஊதியம் : மாதம் ரூ.5,200 - 20200 + தர ஊதியம் ரூ.2,400

கல்வி தகுதி: இதற்கு  குறைந்தபட்சம் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


பணி மற்றும் காலி இடங்கள் : Multi-Tasking Staff (MTS) - 10

ஊதியம் : மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

கல்வி தகுதி: இதற்கு  குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். 


இப்பணியிடங்களுக்கு விளையாட்டுத்துறையில், தடகளம் (ஆண்கள் மற்றும்  பெண்கள் இருவரும்), மட்டைப்பந்து, கபடி, கால்பந்து, டேபிள் டென்னிஸ், கேரம், கூடைப்பந்து, ஹாக்கி,  கைப்பந்து,  பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளில் சாதனையாளர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 


வயதுவரம்பு: விண்ணப்பதாரர் 01.04.2020 தேதியின்படி 18 வயது முதல் 25 வயதிற்குள் இருத்தல் வேண்டும். 


தேர்ந்தெடுக்கும் முறை: விளையாட்டுத் துறையில் வெற்றிப்பெற்ற சான்றிதழ்கள் மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் https://www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-01-2021


மேலும் விவரங்கள் அறிய SPORTS QUOTA Notice என்ற லிங்க்கை க்ளிக் செய்து அதில் உள்ள இணையதளத்தில்  சென்று தெரிந்துகொள்ளவும்.

Post a Comment

0 Comments