Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்கு தினமும் 2 ஜிபி இலவச டேட்டா வழங்க முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்கு தினமும் 2 ஜிபி இலவச டேட்டா வழங்க முதல்வர் பழனிசாமி அறிவிப்பு



இது தொடர்பாக தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் Covid-19 தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியரின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் தற்போது இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இந்த இணையவழி வகுப்புகளில் மாணவ மாணவியர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 மாதம் முதல் ஏப்ரல் 2021 மாதம் வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி இலவச டேட்டா பெற்றிட ELCOT நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் (டேட்டா கார்டுகள்) வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments