Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

2020-21 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வுகள் பள்ளி மாணவர்கள் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - கூடுதல் அறிவுரைகள்

2020-21 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வுகள் பள்ளி மாணவர்கள் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.

Plus One Public Exam 2021 NR Preparation Dir Instructions


அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள உத்தரவு:

2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் 27.01.2021 முதல் 06.02.2021 வரையிலான நாட்களில் தங்கள் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களது விவரங்களை EMIS EMIS Portal-ல் சென்று சரி பார்த்த பின்னர், 01.02.2021 முதல் 11.02.2021 வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்கு சென்று அம்மாணவர்களது கூடுதல் விபரங்களை பதிவேற்றம் செய்து தேர்வுக் கட்டணத்தினையும் இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஒரு சில பள்ளிகளுக்கு கடந்த 2019 - 2020 கல்வியாண்டில் பதினோராம் வகுப்பு பயின்று கடந்த மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுக்கு முறையாக வருகை புரியாத மாணவர்கள் சிலர், தற்போது 2020 - 2021 கல்வி ஆண்டில் மீண்டும் பதினோராம் வகுப்பில் சேர்ந்து பயில்வதாகவும் அவ்வகை மாணவர்கள் விபரங்களை EMIS எண்ணைப் பயன்படுத்தி பெயர்பட்டியலில் சேர்க்க இயலவில்லை எனத் தெரிவித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தொழில்நுட்பப் பிரிவிற்கு அலைபேசி அழைப்புகள் பெறப்படுகின்றன.

எனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், மேற்குறிப்பிட்டவாறு கடந்த 2019 - 2020 கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயின்று மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுக்கு முழுமையாக வருகைபுரியாத மாணவர்களுள் எவரேனும், தற்போது 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் மீண்டும் பதினோராம் வகுப்பில் சேர்ந்து பயின்று வந்தாள் மாணவர்களது விபரங்களை 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாமாண்டு தேர்வுக்கான பெயர் பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரையையும், இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படும் படிவத்தில் உள்ளவாறு பெயர் பட்டியலில் சேர்ப்பதற்கு தேவைப்படும் அம்மாணவர்களது விவரங்களையும் 11.02.2021 தேதிக்குள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments