Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

814 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் இருந்தால் அனுப்பலாம்

814 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் இருந்தால் அனுப்பலாம்


கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 814 கணினி பயிற்றுநர் இடங்களை நிரப்புவதற்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே கணினி அறிவியல் தேர்வு முறைகேடு தொடர்பான புகார்களை வருகின்ற மார்ச் 1 ஆம் தேதிக்குள்  இரு நபர் விசாரணை கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இரு நபர் கமிட்டி விசாரணை துவங்கியுள்ளது. கணினி பயிற்றுநர் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது தேர்வு தொடர்பாக குறைகள் மற்றும் புகார்கள் இருந்தால் அதை வருகின்ற மார்ச் 1 மாலை 5 மணிக்குள் trbtwomemberscommittee@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். மேலும் அதன் பிரதிகளை சென்னை பள்ளிக் கல்வி வளாகத்தில் செயல்படும் இரு நபர் கமிட்டிக்கு தபாலில் அனுப்ப வேண்டும் புகார் தெரிவிப்பவர், கமிட்டி அழைக்கும் போது விசாரணைக்கு நேரில் வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments