Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

கல்வி நிறுவனங்களை வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் திறக்க அரசாணை வெளியீடு

கல்வி நிறுவனங்களை வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் திறக்க அரசாணை வெளியீடு.


1. கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்களும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. கலை அறிவியல் பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் டிப்ளமோ கல்லூரிகள் பிடிக்கும் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் ஆறு நாட்களும் கல்லூரிகள் செயல்படும் என்று இது குறித்து அரசாணை உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா வெளியிட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பின் காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் மூடப்பட்டன.

இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான நான்காவது செமஸ்டர் மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வுகளும் அரியர் மாணவர்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. 

மாணவர்கள் தொடர்ந்து கற்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் முறையில் தொடர்ந்து பாடங்கள் மட்டும் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் சற்று குறைய இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் 7ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. 

தற்போது அறிவித்துள்ள அறிவிப்பின்படி கலை அறிவியல் பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் டிப்ளமோ கல்லூரியில் படிக்கும் அனைத்து ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கும் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் கல்லூரி திறக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. பாடத்திட்டத்தில் உள்ளவாறு பாடங்களை முழுமையாக நடத்தி தேர்வுகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் நடத்த வேண்டியுள்ளதால் வாரத்தில் 6 நாட்களும் கல்லூரிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments