Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

NMMS 2021 தேர்வு நுழைவுச்சீட்டை 15-02-2021 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் / NMMS Hall Ticket NR Downloading Instructions

NMMS 2021 தேர்வு நுழைவுச்சீட்டை 15-02-2021 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் / NMMS Hall Ticket NR Downloading Instructions

21.02.2021 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கான (NMMS) தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை 15.02.2021 அன்று பிற்பகல் முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள்  www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஏற்கனவே இத்தேர்விற்கு வழங்கப்பட்ட User ID மற்றும் Password–ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய் தேவையான அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

தேர்வர்களின் தேர்வுகூட நுழைவுச் சீட்டுகளில் பெயர், புகைப்படம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் ஏதேனும் இருப்பின் அத்திருத்தத்தினை சிகப்பு நிற மையினால் சுழித்து பின்னர் சரியான பதிவினை குறிப்பிட்டு பள்ளி தலைமையாசிர் அவர்களிடம் சான்றொப்பம் பெற்று  தேர்வெழுத அத்தேர்வர்களுக்கு அனுமதி வழங்குமாறு தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



Post a Comment

0 Comments