Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

12 ஆம் வகுப்பு (பிளஸ் 2) பொதுத் தேர்வு 2021 கால அட்டவணை வெளியீடு / 12th (Plus Two) Public Exam 2021 Time Table Published

12 ஆம் வகுப்பு (பிளஸ் 2) பொதுத் தேர்வு 2021 கால அட்டவணை வெளியீடு / 12th (Plus Two) Public Exam 2021 Time Table Published.


தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகின்ற மே 3ஆம் தேதி தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் வருகின்ற 03-05-2021 அன்று தொடங்கி 21-05-2021 அன்று முடிவடையும் என தெரிவித்துள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையும் வெளியிட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். தேர்வுகள் காலை 10.00 மணி முதல் மதியம் 01.15 மணி வரை நடக்கும். காலை 10.00 மணியிலிருந்து 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதிக்கப்படுவர். அதை தொடர்ந்து காலை 10.10 முதல் 10.15 வரை மாணவர்கள் பற்றிய விவரங்கள் சரியாக உள்ளதா  என  பரிசோதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேதி           : பாடங்கள்

03-05-2021   : தமிழ் 

05-05-2021   : ஆங்கிலம் 

07-05-2021   : கணினி அறிவியல் 

11-05-2021   : இயற்பியல், எகனாமிக்ஸ்

17-05-2021   : கணிதம், விலங்கியல், காமர்ஸ், மைக்ரோ பையோலஜி, 

19-05-2021   : உயிரியல், வரலாறு, பையோலஜி 

21-05-2021   : வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்




12th (Plus Two) Public Exam 2021 Time Table - Download here...

Post a Comment

0 Comments