Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

தமிழகத்தில் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படாது : அமைச்சர் செங்கோட்டையன் பதில்

தமிழகத்தில் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்தார்.



ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இன்றைய சூழ்நிலையில் 6,7 மற்றும் ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் தற்போது 98.5 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும் 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் இல்லை. அதற்கு பதில் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மத்திய அரசு உதவியுடன் டேப் (Tab) வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Post a Comment

0 Comments