Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

பகுதிநேர பயிற்றுநர்களின் ஊதிய ரூ 7, 700 லிருந்து ரூ 10,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

 பகுதிநேர பயிற்றுநர்களின் ஊதிய ரூ 7, 700 லிருந்து ரூ 10,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு


அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஒருங்கிணைக்கப்பட்ட பள்ளிக்கல்வி மற்றும் மாநில திட்ட இயக்குநரின் கருத்துருவை ஏற்று மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணை மூலம் அரசு பள்ளிகளில் கல்விசார் (உடற்கல்வி, ஓவியம், இசை மற்றும் வாழ்க்கை கல்வி) இணை செயல்பாடுகள் பயிற்றுவிக்கும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட 16,549 பகுதிநேர பயிற்றுநர் பணியிடங்களில் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதிநேர பயிற்றுநர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகள் சிறக்க செய்து வருவதனால் அவர்களது பணி திறமையை மேலும் மேம்படுத்தும் பொருட்டு மேற்கண்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இதர வழிமுறைகளுடன் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர்களது மாத ஊதியத்தை (மே மாதம் நீங்களாக 11 மாதங்களுக்கு மட்டும்) ரூபாய் 7700 ரூபாயிலிருந்து ரூபாய் 10,000 ஆக ( ரூபாய் பத்தாயிரம் மட்டும்) உயர்த்தி வழங்க முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்:
1. தற்போது பணியில் உள்ள பகுதி நேரப் பயிற்றுனர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு மறுஒதுக்கீடு செய்து இனி வரும் காலங்களில் அவர்கள் வாரத்திற்கு 3 முழு நாட்கள் பணி புரிவதை உறுதி செய்ய வேண்டும்.

2. பகுதிநேர பயிற்றுநர்கள் பணிபுரியும் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் வழங்கும் கால அட்டவணையின் படி இவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களுக்கு கல்விசார் இணை செயல்பாடுகள் பயிற்றுவிக்க வேண்டும்.

3. இவர்களுக்கான வருகைப்பதிவேடு சார்ந்த தலைமையாசிரியரால் முழுமையாக பராமரிக்கப்பட வேண்டும்.

Post a Comment

0 Comments