Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

2900 கள உதவியாளா் பணியிடங்களுக்கு மின்வாரியத்தில் வேலை அறிவிப்பு / TANGEDCO Recruitment 2020 for 2900 Field Assistant (Trainee) Vacancies

2900 கள உதவியாளா் பணியிடங்களுக்கு மின்வாரியத்தில் வேலை அறிவிப்பு / TANGEDCO Recruitment 2020 for 2900 Field Assistant (Trainee) Vacancies.



மின் வாரியத்தில் உள்ள கள உதவியாளர் (பயிற்சி) காலிப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலமாக 2900 கள உதவியாளர் (பயிற்சி) பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதன்படி மார்ச் 24, 2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது. ஆனால் உலகில் அச்சுறுத்தி வந்த கொரோனா தாக்கத்தால் மறு தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதன் காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கள உதவியாளர் (பயிற்சி) பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பிப்ரவரி 15 முதல் மார்ச் 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பணி: கள உதவியாளா் (பயிற்சி) (Field Assistant(Trainee))

காலியிடங்கள்: 2900

சம்பளம்: மாதம் ரூ. 18,800 - 59,900

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15 முதல் மாா்ச் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணம்: BC, MBC பிரிவினர் ரூ.1000, SC, ST பிரிவினர் ரூ.500 /- அனைத்து பிரிவினைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் பிரிவினர் ரூ.500 /- கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கிகள் சேவை அட்டைகளை பயன்படுத்தி செலுத்தலாம்.

தகுதிவயர்மேன் அல்லது  எலக்ட்ரீஷியன் அல்லது  எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு பிரிவில் ITI முடித்து மேலும் தொழில் பழகுநர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் தமிழ் மொழி குறித்த போதுமான  அறிவை பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: SC, SCA, ST மற்றும் ஆதரவற்ற விதவைகள் பிரிவினர் 18 முதல் 35-க்குள்ளும், MBC, BC, பிரிவினர் 18 முதல் 32க்குள்ளும், ஏனைய பிரிவைச் சேராத இதர பிரிவினர் 18 முதல் 30-க்குள்ளும் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைனில் மூலம் www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு மற்றும்  உடல் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும்

மேலும் விபரங்களுக்கு 13.03.2020 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு கீழே கொடுக்கபட்டுள்ளது.

TANGEDCO Recruitment 2020 for 2900 Field Assistant - Download here...

TANGEDCO Website download link : Download here...

Post a Comment

0 Comments