Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் சூழ்நிலையில் வருகின்ற மே 1, 2 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை

தமிழத்தில் வருகின்ற மே மாதம் 01 மற்றும் 02-ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு ஆக்ஷன் பற்றாக்குறையை பூர்த்திசெய்ய ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுவது தொடர்பாக செய்தித்தாள்களில் வெளிவந்த செய்தி தொடர்பாகவும் ரெம்டிசிவிர் பற்றாக்குறை தொடர்பான செய்தித்தாள்களில் வெளிவந்த செய்தி தொடர்பாகவும் தாமாக முன்வந்து ஐகோர்ட் வழக்கை எடுத்துக்கொண்டது. இது தொடர்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை, மேலும் தடுப்பு மருந்து பற்றாக்குறையும் எதிவும் இல்லை என்று விளக்கம் அளித்தனர். இருந்தாலும் இதுதொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


மேலும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை ரெம்டிசிவிர் மருந்து பற்றாக்குறையும் எதுவும் இல்லை என்று விளக்கமளித்தார். மேலும் தமிழக சுகாதாரத்துறை செயலாளரான ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி இதுதொடர்பாக விளக்கமளித்தார். இதைதொடர்ந்து மூத்த வழக்கறிஞர்கள் பலரும் ஆஜராகி அடுக்கு அடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள்.


மத்திய அரசு தரப்பில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவது தொடர்பாக தமிழக அரசுடன் ஆலோசித்து அதன் பிறகுதான் நடவடிக்கை எடுத்தோம். இந்த நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ள காரணத்தால் அதனை பரிசலினை செய்ய உள்ளோம் என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தடுப்பூசி மற்றும்  ரெம்டிசிவிர் மருந்து ஆகியவை அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார். மேலும் வருகின்ற மே மாதம் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். எனவே ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை ஏப்ரல் 28-ஆம் தேதி அன்று வெளியிட வாய்ப்புள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா வழிமுறைகளை  பின்பற்ற வேண்டும் இதில் எந்த சமரசம் செய்ய கூடாது. வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தக்கூடிய மற்றும் தொடர்புடைய வாகனங்கள் மட்டுமே இந்த 2 நாட்களில் அனுமதிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.

Post a Comment

0 Comments