
* 2020-21 ஆம் கல்வி ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்று பரவலின் காரணமாக 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணாக்கர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து கல்வி கற்கும் சூழல் நாளது வரை ஏற்படவில்லை. 9-ஆம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் துவக்கப்பட்டு கோவிட்-19 நோய்தொற்று அதிகரித்ததால்,22.03.2021 அன்று முதல் பள்ளிகள் மூடப்பட்டன.12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு செய்முறைத் தேர்வுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 05.05.2021 அன்று தொடங்க இருந்த 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கோவிட்-19 நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாக வரவேண்டிய அவசியம் தற்போது எழவில்லை.எனினும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி குறித்து மறுஅறிவிப்பு வரும் வரையில் அவர்களை பொதுத்தேர்வுக்கு தொடர்ந்து தயார் செய்தல்வேண்டும்.மேலும் மற்ற வகுப்பு மாணவர்கள் கற்றல் இடைவெளியின்றி பயில்வதை உறுதிசெய்யும் பொருட்டு Bridge Course Material மற்றும் Work book வழங்கப்பட்டு, இதுதொடர்பான நிகழ்ச்சிகள் கல்வி தொலைக்காட்சியில் தினசரி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் அனைத்து அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வருகின்ற 01.05.2021-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரதேவையில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.எனினும், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்க இருப்பதால் பொதுத்தேர்வு தேதி குறித்து மறுஅறிவிப்பு வரும் வரையில் அவர்களுக்கான வழிக்காட்டுதல்களை(Guidance) ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து வழங்கவும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு "Bridge Course Material மற்றும் Work book"-ல் உள்ள பாடங்களை கல்வித்தொலைக்காட்சியின் வாயிலாக கற்கவும்,பயிற்சிகளை மேற்கொள்ளவும்,வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் தொடர்ந்து வழிக்காட்டுதல்களை வழங்கவும்,இதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் உள்ள தொலைபேசி,வாட்ஸ்அப் அல்லது வேறு டிஜிட்டல் வழிகள் அல்லது மாற்று வழிகள்(Digital/Alternate Modes) பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாணவர்கள் மேற்காண்ட வழிகளில் அனுப்பும் பயிற்சிகளுக்கான விடைத்தாட்களை சரிபார்த்து தேவையான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அடுத்த கல்வியாண்டுக்கு பள்ளிகளை தயார்செய்யும் பொருட்டும், அதற்கான ஆயத்தபணிகளை மேற்கொள்ளும் பொருட்டும், மாணவர்களுக்கான மேற்கண்ட பயிற்சிகளை ஆய்வு செய்து அதற்கான தொடர்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும் வருகின்ற 2021 மே மாதம் கடைசி வாரத்தில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டிய நிலைஏற்படும் எனவும், இதற்கான அறிவிப்பு தனியே வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்காண்ட வழிகாட்டுதல்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்கள்/மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரியப்படுத்தி தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு