Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

இந்தியா முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான இணையதள முன்பதிவு இன்று முதல் தொடக்கம்.


கொரோனா தொற்று 2-ஆம் அலையின் பரவல் அதிகரித்து வருகின்ற இந்த சூழ்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இரவு நேரங்களில் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.



தற்போதைய சூழ்நிலையில் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற மே மாதம் 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசானது அனுமதி வழங்கியுள்ளது.


இதன்படி அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் பொழுது நோய் எதிர்ப்பாற்றால் உருவாகி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என, டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது.


இதற்காக https://www.cowin.gov.in என்ற, இணையதளத்தில் சென்று, 'ரிஜிஸ்டர் மை செல்ப்' என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்களின் மொபைல் எண்ணை பதிவு செய்து பெயர் மற்றும் வயது உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் ஆதார் எண் உள்ளிட்ட அரசு அங்கீகரித்த ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் எண்ணை பதிந்து செய்து, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்

Post a Comment

0 Comments