தமிழக அரசின் தலைமை செயலர் அவர்களுக்கு தமிழ்நாடு தலைமை செயலக சங்க முன்னாள் செயலரான வெங்கடேசன் அனுப்பி வைத்துள்ள கோரிக்கை மனு விபரம்:
கொரோனா தொற்றின் 2-ஆம் அலை மிகவும் தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தலைமை செயலகம் மற்றும் அமைச்சு பணி தலைமை அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர், சென்னையின் அண்டை மாவட்டங்களில் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் மின்சார ரயில்களை நம்பி உள்ளனர். இந்த சூழ்நிலையில் அலுவலக நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் அதிக அளவில் கூட்ட நெரிசல் இருப்பது வழக்கமாக உள்ளது.
மாநகர பேருந்துகளிலும் இதே நிலைமையில் தான் உள்ளது. சென்னையில் மட்டுமின்றி சென்னையை தவிர்த்து மாற்ற மாவட்டங்களிலும், அரசு ஊழியர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியே அலுவலகம் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது நுாற்றுக்கும் மேலான தலைமை செயலக பணியாளர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது. பல துறைகளின் தலைவர் அலுவலகங்களில் போதுமான இட வசதியின்றி இட நெருக்கடி உள்ளது.
இதன் காரணமாக நோய் தொற்று பரவும் அபாய சூழ்நிலையே நிலவி வருகிறது. சென்ற ஆண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளாக அரசு 50% பணியாளர்களை சுழற்சி முறையில் பணியாற்ற உத்தரவிட்டது. கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் மிகவும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவதால் இதை கட்டுப்படுத்தும் விதமாக தலைமை செயலகம் உள்ளிட்ட அனைத்து துறை அரசு ஊழியர்களையும் 50% என சுழற்சி முறையில் பணிபுரிய தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு