கொரோனா பரவலால் பள்ளிகள் திறக்கப்படாததால் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள் வருமானம் இன்றி தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தங்களின் தேவையை பூர்த்தி செய்ய அவர்கள் தினக்கூலியாக வேலை செய்யும் அவலம் நிலவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் தின கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 300 தனியார் பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வருகின்றன அவற்றில் 40,000 ஆசிரியர்களுக்கு மேல் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக கடந்த ஓராண்டாக தனியார் பள்ளிகள் முடியே உள்ளதால் அந்த பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் வருமானம் இன்றி வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் முதல் அலையின் போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்துகொண்டே வந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அவர்கள் நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருந்தனர். அதற்குள் கொரோனா 2-ஆம் அலை பரவத் தொடங்கியுள்ளதான் காரணமாக மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தனியார் பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப்போனது.
இதனால் தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் வருமானம் இன்றி குடும்பத்தை நடத்த முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் கிராமப் பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் கட்டிட மற்றும் விவசாய வேலைகளுக்கு சென்று தங்களது வாழ்வை நடத்தி வருகின்றனர். அதிலும் குறைந்த அளவே வருமானம் கிடைப்பதாக ஆசிரியர்கள் மன வேதனையுடன் கூறுகின்றனர்.
தெலுங்கானாவில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாத மாதம் 2 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும் 25 கிலோ இலவச அரிசியும் வழங்குவது போல் தமிழக அரசும் தங்களுக்கு வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு