Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

முதியவர்களுக்கு வீடியோ மூலம் பாடம் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

'கற்போம் எழுதுவோம்' திட்டத்தின் கீழ் படிப்பவர்களுக்கும், கல்வி, 'டிவி'யில் வீடியோ பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு அவற்றின் மூலம் பாடங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


முறைசாரா கல்வி திட்டத்தின் இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:


தமிழ்நாட்டில் 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 15 வயதிற்கும் மேற்பட்ட எழுதவும் படிக்கவும் தெரியாத 3.10 லட்சம் பேருக்கு 'கற்போம் எழுதுவோம்' என்ற இயக்கம் மூலமாக எழுத்தறிவு வழங்கப்பட்டு வருகிறது.இதற்காக அரசு மற்றும் அரசு உதவி  பெற்று இயங்கி வரும் தொடக்க, நடுநிலை பள்ளி வளாகங்களில் சுமார் 15, 823 கற்போர் எழுத்தறிவு மையங்களை உருவாக்கியுள்ளது.


தன்னார்வ ஆசிரியர்களின் உதவிகளுடன் கற்பித்தல் தொடர்பான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நிலவி வரும் கொரோனா அதிகரிப்பு சூழலை கருத்தில் கொண்டு, கற்போர் பயிற்சி திட்டத்தில்  கூறப்பட்டுள்ள பாடத்தின் கருத்துகளை, ஒலி மற்றும் ஒளி  வடிவிலான வீடியோக்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. அவர தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாட வீடியோக்கள், கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் படிப்பவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ கல்வி டிவி-யில் தினமும் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இன்று முதல் தினமும் மாலை 7 மணி முதல் அரை மணி நேரம் பாடங்கள் ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு  அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கீழ் அதிக அளவில் முதியோர் படித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments