வருகின்ற மே 2-ஆம் தேதி அன்று முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் கூட வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் ஏஜெண்டுகளுக்கு மட்டும் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கபடாது.
அதேபோல் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.
திரைப்படத் துறையைப் பொருத்தவரை தமிழகத்தில் சினிமா படப்பிடிப்பு மற்றும் டி.வி தொடர் படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் முழு ஊரடங்கு தினம் அன்று சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் குறைந்த அளவே இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்களில் காலை 6 - 10 மணி, மதியம் 12 - 3 மணி, மாலை 6 - இரவு 9 மணி வரை பார்சல் முறையிலான சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் உணவுகளை டெலிவரி செய்ய காலை 6 - 10 மணி, மதியம் 12 - 3 மணி, மாலை 6 - இரவு 9 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு