கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் – பிரதமர் மோடி அறிவிப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனது பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நிதி உதவி மற்றும் சிறப்பு திட்டங்களையும் அறிவித்துள்ளார்.
பிரதமரின் அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் கோரத்தாண்டவம் மக்களை கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.ஒவ்வொரு நாளும் தொற்றின் பாதிப்பும், அதனால் ஏற்படும் இழப்புகளும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றது.பல மாநிலங்களிலும் பலகட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் உயிரிழப்புகளை தடுக்க முடியவில்லை.இதன் காரணமாக பல மாநில அரசுகளும் கொரோனா தொற்றினால் உயிரிழந்த குழந்தைகளுக்கு பல சிறப்பு திட்டங்களையும் அறிவித்து வருகிறது.அதன் அடிப்படையில் நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் கொரோனா காரணமாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் இருவரையும் இழந்த குழந்தைகள் PM-CARES திட்டத்தின் கீழ் ஆதரிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.அவர்கள் 18 வயதை அடைந்தவுடன் மாதாந்திர உதவித்தொகையும் PM கேர்ஸில் இருந்து 23 வயதாகும்போது ரூ.10 லட்சம் நிதியும் வழங்கப்படும்.
கொரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வியும் உயர்கல்விக்கான கடனும் கிடைப்பதற்கு உதவியும் செய்யப்படும்.மேலும் அந்த கடனுக்கான வட்டியும் PM கேர்சில் இருந்து வழங்கப்படும்.18 வயது வரை இந்த குழந்தைகளுக்கு ஆயுஷ்மான் பாரதத்தின் கீழ் ரூ.5 லட்சம் இலவச சுகாதாரகாப்பீடு மற்றும் அதற்கான தவணைத்தொகை PM-கேர்சில் இருந்து வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு