Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்

தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா பாதுகாப்புமையம் ஆகிய இடங்களில் அமைச் சர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: கொரோனா காலத்தில் தனியார்பள்ளி ஆசிரியர்களின் நிலைமிகவும் வருந்தத்தக்க ஒன்றுதான். இவர்களில் பலரும் தங்களின் சிரமங்கள் குறித்து செல்லிடப்பேசியிலும், மின்னஞ்சலிலும் என்னிடம் தெரிவித்துள்ளனர். இவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க விரைவில் முதல்வருடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பாரணம் கிடை இதேபோல், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம்கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனை யில் இறக்காமல் வீட்டிலோ அல்லது வரும் வழியிலோ பெற்றோர் இறந்தாலும், அந்தக்குழந்தைகளுக்கும் உரிய நிவாரணத் தொகை கிடைக்க வழிவகை செய்ய முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.நீட்தேர்வு குறித்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் உரிய முடிவு எடுக்கப்ப டும்.மேலும், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, குறைந்தபட்சம் ஓரிரு மாதங்களுக்கு பிறகுதான் தேர்வு நடத்தப்படும் என்றார்.

Post a Comment

0 Comments