நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன் என விளக்கம்.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி ஆய்வு மேற்கொண்டார்.பாதுகாப்போடு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு நோயாளிகளிடம் அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.அவர்கள் உடல் எப்படி இருக்கிறது, சிகிச்சை முறை நன்றாக இருக்கிறதா, தேவைகள் நிறைவேற்றப்படுகிறதா என்று முதல்வர் ஸ்டாலின் நோயாளிகளிடம் அன்பாக கேட்டறிந்தார்.
இதையடுத்து கோவை மாநகராட்சி 5 மண்டலங்களில் தலா 10 இன்னோவா ஆம்புலன்ஸ் வீதம், 50 இன்னோவா ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்.கோவையில் கொரோனா கேஸ்கள் இரண்டு நாட்களாக குறைத்தாலும், தமிழகத்திலேயே கோவையில் மட்டும்தான் கொஞ்சம் நிலைமை மோசமாக உள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக கோவை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராமச்சந்திரன், சக்கரபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளார்.நான்கு மாவட்டங்களில் கொரோனாவை துரிதமாக கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு