மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர் நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை, மருத்துவப்பணியாளர் தேர்வுவாரியம் வெளியிட்டிருந்தது. இந்த தேர்வுக்காக பி.எஸ்சி. (அலைடு ஹெல்த் சயின்ஸ்) மற்றும் பி.எஸ்சி.(பிசிசி-யன் அசிஸ்டென்ட்) பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த நிலையில் விண்ணப்பம் விவரங்களின்படி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.mrb.trigot.in) வெளியிடப்பட்டுள்ளது.எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு 20 சத வீதம், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக்கு 30 சதவீதம், பட்டப் படிப்புக்கு 50 சதவீதம் என்ற அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் 1,278 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தகுதி பெற்றுள்ளனர்.
இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணைக் காட்டிலும் கூடுதல் மதிப்பெண் இருப்பின் அத்தகைய விண்ணப்பதாரர்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் மருத்துவப் பணியாளர் தேர்வுவாரியத்தில் முறையிடுமாறு அதன் உறுப்பினர் செயலர் அறிவித்துள்ளார்.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு