Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவு, புதிய கல்வி ஆண்டு நாளை தொடக்கம்

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், கோடை விடுமுறை காலம் இன்றுடன் முடிகிறது.நாளை முதல் புதியகல்வி ஆண்டு துவங்க உள்ளது.நாடு முழுதும் உள்ள பள்ளிகளில், மத்திய இடைநிலை கல்விவாரியமான சி.பி.எஸ்.இ., - இடைநிலை சான்றிதழ் கல்வி அமைப்பான ஐ.சி.எஸ்.இ., ஆகிய பாடதிட்டங்களிலும் மற்றும் அந்தந்த மாநில பாட திட்டங்களிலும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாட திட்டங்களில், ஏப்ரல் மாதம் புதிய கல்வி ஆண்டு துவங்கிவிட்டது.மாணவர்களுக்கு புதிய கல்விஆண்டுக்கான பாடங்கள் நடத்தப்படுகின்றன.சுற்றறிக்கை தமிழக பாடதிட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத்த்தில் தான் கல்வியாண்டு துவங்கும்.அதன்படி, இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு இருந்தபோதும் தேர்தலுக்கு முன் பாடங்கள் முடிக்கப்பட்டுவிட்டன.
மே மாதம் 1-ஆம் தேதி முதல் கோடைவிடுமுறையை பள்ளிகல்வி இயக்குனரகம் அறிவித்தது.புதிய கல்விஆண்டுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, மே மாத இறுதியில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டியிருக்கும் என அப்போது அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், கோடை விடுமுறை காலம் இன்றுடன் முடிகிறது.நாளை முதல் புதிய கல்விஆண்டு துவங்கவுள்ளது.கடந்த ஆண்டில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போதும், ஜூன் 1 முதல் ஆன்லைன் வழியில் பாடங்களை நடத்த பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது.அதன்படி, ஆன்லைன் வகுப்புகள் துவங்கின.புதிய கல்விஆண்டு நாளை துவங்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை.மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகள், மாவட்ட கல்விஅதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு புதிய கல்விஆண்டு குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரகம் எந்த தகவலையும் அனுப்பவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments