Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

மாநில அரசின் விதிகளை பின்பற்ற CBSE பள்ளிகளுக்கு உத்தரவு

மாநில அரசின் விதிமுறைகளையும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., வாரியம் அறிவுறுத்தியுள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., செயலர் அனுராக் திரிபாதி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டுமென்றும் இணைப்பு அந்தஸ்தை பெறும் போது விதிகளை பின்பற்றுவதாக கையெழுத்திடும் பள்ளிநிர்வாகிகள் பின்னர், அதில் கூறப்பட்டவற்றை சரியாக கடைப்பிடிக்காமல் இருந்து வருவது தெரிய வந்துள்ளது.மேலும் சி.பி.எஸ்.இ., பாடதிட்டத்தின் இணைப்புவிதிகளை மட்டுமின்றி மாநில அரசுகள் அமல்படுத்தும் விதிகளையும் முறையாக பின்பற்ற வேண்டும்.அப்படி விதிமுறைகளை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் பள்ளிகளின் இணைப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு பள்ளியும் தங்களின் இணையதளத்தில் பல்வேறு அடிப்படை தகவல்களை பெற்றோர் பார்க்கும் வண்ணம் இடம்பெற செய்யவேண்டும்.மேலும் பள்ளியின் இணைப்பு அந்தஸ்தின் விபரம், பள்ளிக்கு வழங்கப்பட்ட குறியீட்டு எண்ணின் விபரம், முழு முகவரி, பள்ளி முதல்வரின் பெயர், கல்வித்தகுதி, இ-மெயில் முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட தொடர்புவிபரங்களுடன் இடம் பெறவேண்டும்.அரசுதரப்பில் பெறப்பட்ட கட்டட, சுகாதார, தீயணைப்பு சான்றிதழ்களின் நகல்கள் அறக்கட்டளையின் பதிவுச்சான்று டி.இ.ஓ.,விடம் வழங்கிய சுயஉறுதி சான்று, மாணவர்களுக்கான கட்டண விபரம், மூன்றாண்டுகளின் தேர்வுமுடிவுகள் ஆண்டுகால அட்டவணையும் இணையதளத்தில் பார்க்கும் வகையில் இடம் பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments