Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

6156 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு ஜூன் - 2021 மாத ஊதிய கொடுப்பாணை

பார்வை ஒன்றில் காணும் அரசாணையில், பல்வேறு அரசாணைகளின்படி தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்ட அரசு / நகராட்சி / உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 6,156 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதப் பணியிடங்களுக்கு கடைசியாக 01.01.2018 முதல் 31122020 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

2 மேற்காணும் தற்காலிக பணியிடங்களுக்கு 0101.2021 முதல் மேலும் மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி ஆணையர், அரசிற்கு கருத்துரு அனுப்பியுள்ளார். மேலும் மே 2021ம் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை பார்வை 2.00 காணும் கடிதங்களின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஜுன் 2021 ஆம் மாதத்திற்கு ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதியம் வழங்க ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர், கருத்துரு அனுப்பியுள்ளார்.

3. பார்வை 1ல் குறிப்பிட்டுள்ள அரசாணையில் தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்ட தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துரு, அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், இக்கடிதத்தின் இணைப்புகளில் 1 முதல் VI-ல் கண்டுள்ள 6158 தற்காலிகப் பணியிடங்களுக்கு ஜுன் 2021-ஆம் மாதத்திற்கான ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான ஜுன் 2021-ம் மாதத்திற்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments