குழந்தைகளுக்கான தடுப்பூசி கிடைத்துவிட்டால் அது பள்ளிகளை மீண்டும் திறக்க வழிவகுக்கும் என்று, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.நமதுநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து வருகிறது.இதற்கிடையே, 18-வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. என்றாலும் குழந்தைகளுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளது.எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:நம் நாட்டில், குழந்தை களுக்கான தடுப்பூசிகள் விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.
'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 2 - 18 வயதினருக்கான, 'கோவாக்சின்' தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.அதன் 2 மற்றும் 3-ஆம் கட்ட பரிசோதனைகளின் தரவுகள், செப்டம்பரில் கிடைத்துவிடும்.அதற்கு, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், உடனடியாக அந்த தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு செலுத்தும் பணிகள் துவங்கப்படும்.
சாதனை
அதற்கு முன், அமெரிக்காவின் 'பைசர்' நிறுவன தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்துவிட்டால், அதுவும் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் கிடைத்து விட்டால், அது ஒரு மைல்கல் சாதனையாக அமையும். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு இந்தத்தடுப்பூசிகள் வழிவகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு