மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படியை மத்தியஅரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயர்த்தியது.ஆனால், கொரோனா பரவல் தீவிரமானதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்தது.எனவே மத்தியஅரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும் (டி.ஏ.), ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணமும் (டி.ஆர்.) ஜூலை 2021-ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த ஆண்டு அரசு அறிவித்தது.
இதற்கிடையில், ஜூலை மாதம் முதல் மீண்டும் டிஏ, டிஆர் வழங்கப்படுகிறது என்று சமூக வலை தளங்களில் வதந்திகள் பரவின.இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் நேற்று அளித்த விளக்கத்தில், 'மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
இது தொடர்பான பொய்யான தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவிவருகின்றன.உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு