நமது மாநிலத்தில் 2021ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதிலிருந்து அனைத்து மாணவர்களுக்கும் விலக்களித்ததைப் போல ஆகஸ்டு 2021 திங்களில் நடைபெறவுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுகளைத் தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவரும் 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப் பிரிவு 17(i)-ன் அடிப்படையில் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
இவ்வாறு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும். மேலும் மேற்படி தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் தாங்கள் இத்தேர்வினை எழுதலாம் என்றும் தங்களது அடிப்படையில் ஆணையின் தேர்வு எழுதும் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி விரும்பும்பட்சத்தில் சுய விருப்பத்தின் பின்னாளில் பெற்றதாக இந்த தங்களை அறிவிக்குமாறு கோரலாகாது என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு